Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

10th January 2024 19:05:31 Hours

பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் புதிய பணிப்பாளர் கடமை பொறுப்பேற்பு

இராணுவத் தலைமையகத்தின் பொறியியல் சேவைகள் பணிப்பகத்திற்கு புதிய பணிப்பாளராக பொறியியல் சேவைகள் படையணியின் பிரிகேடியர் வை.கே.எஸ் ரங்கிக பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 08) சுருக்கமான சமய நிகழ்வின் போது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

புதிய பணிப்பாளர் புதிய நியமனத்தை ஏற்றுக்கொண்டதைக் குறிக்கும் வகையில் மகா சங்க உறுப்பினர்களின் 'செத் பிரித்' பராயணங்களுக்கு மத்தியில் முறையான உத்தியோகபூர்வ ஆவணத்தில் கையெழுத்திட்டார். புதிய பணிப்பாளரான பிரிகேடியர் வை.கே.எஸ் ரங்கிக பீஎஸ்சீ பீடிஎஸ்சீ அவர்கள் இந்த நியமனத்திற்கு முன் இராணுவ வழங்கல் பாடசாலையின் தளபதியாக பணியாற்றினார்.

இந் நிகழ்வில் பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டனர்.