23rd January 2025 17:35:51 Hours
பொறியியல் சேவைகள் படையணியின் 75வது ஆண்டு நிறைவு விழா, பனாகொடை முகாம் வளாகத்தில் பொறியியல் சேவைகள் படையணியின் தலைமையகத்தில் 2025 ஜனவரி 10, அன்று ஒரு பிரமாண்டமான நிகழ்வுடன் கொண்டாடப்பட்டது. இந்த முக்கியமான நிகழ்வில் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியும் 22 வது காலாட் படைப்பிரிவின் தளபதியுமான மேஜர் ஜெனரல் கேஎஎன் ரசிக்க குமார என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் கலந்து கொண்டார்.
பொறியியல் சேவைகள் படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் என்டபிள்யூபீஎஸ்எம் பெரேரா அவர்களால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து படைத் தளபதிக்கு ஒரு சம்பிரதாய பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன் நிகழ்வு ஆரம்பமானது. அன்றைய நிகழ்வில் படையணியில் போரில் வீர மரணமடைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அஞ்சலி செலுத்துவதைத் தொடர்ந்து, பொறியியல் சேவைகள் படையணியின் படையினரின் துல்லியம் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் ஒரு அற்புதமான அணிவகுப்பை படைத் தளபதி பார்வையிட்டார். அணிவகுப்பைக் காண முன்னாள் படைத் தளபதிகள் மற்றும் நிலைய தளபதிகள் வநடதிருந்தமை நிகழ்வின் குறிப்பிடத்தக்க அம்சமாகும். பின்னர், அதிகாரிகள் மற்றும் படையினருடன் இணைந்து படைத் தளபதி குழு படம் எடுத்து கொண்டார். இச் செயல் படையணியின் ஒற்றுமை மற்றும் பெருமையின் தருணத்தைக் எடுத்து காட்டியது.
பின்னர், அதிகாரிகள் உணகைத்தில், அதிகாரவாணையற்ற அதிகாரிகள் மற்றும் சார்ஜன்ட்கள் மற்றும் படையினர் ஆகியோர்களால் ஏற்பாடுசெய்யப்பட்ட தேநீர் விருந்தும் இடம்பெற்றது. கொண்டாட்டத்தின் இந்த பகுதியின் சிறப்பம்சம், படைப்பிரிவின் நீடித்த பாரம்பரியத்தின் அடையாளமாக ஆண்டுவிழாவில் கேக் வெட்டப்பட்டது.
அதிகாரிகளுக்கு உரையாற்றிய படைத் தளபதி படையணியில் உள்ள அதிகாரிகளின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்புக்கு நன்றியைத் தெரிவித்தார். இலங்கை இராணுவத்தின் நடவடிக்கைகளை ஆதரிப்பதில் படையணியின் முக்கிய பங்கை அவர் வலியுறுத்தினார், தேசிய பாதுகாப்பில் பொறியியல் நிபுணத்துவத்தின் தொடர்ச்சியான முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினார்.
பின்னர், படைத் தளபதி படையினருடன் மதிய உணவிலும் கலந்துகொண்டார். அவர் அனைத்து நிலையினருக்கும் உரையாற்றுகையில், பொறியியல் சேவைகள் படையணியின் சாதனைகளை தொடர்பாக சிந்தித்து, சிறப்பு மற்றும் சேவைக்கான படைப்பிரிவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்தினார்.
பொறியியல் சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் வைகேஎஸ் ரங்கிக பீஎஸ்சீ பீடிஎஸ்சீ, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டங்களில் பங்கேற்றனர்.