08th December 2023 18:41:24 Hours
நிதி முகாமைத்துவம் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் அம்பலாந்தோட்டை 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணி தலைமையகத்திற்கு டிசம்பர் 05 ஆம் திகதி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டார்.
இதன்போது மேஜர் ஜெனரல் எஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களுக்கு அன்பான வரவேற்பு வழங்கப்பட்டதை தொடர்ந்து படையினருக்கு உரையாற்றியதுடன் அவர்களின் சேவைகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பின்னர், 10 வது (தொ) பொறியியல் சேவைகள் படையணியின் கட்டளை அதிகாரியினால் படையலகின் தற்போதைய பங்கு மற்றும் பணிகள் தொடர்பாக விளக்கினார். அதனைத்தொடர்ந்து அவர் படையணிக்கு வருகை தந்ததைக் குறிக்கும் வகையில் முகாம் வளாகத்தில் மரக்கன்று ஒன்றை நட்டுவைத்தார்.
பின்னர் அனைத்து நிலையினருடனும் தேநீர் விருந்துபசாரத்தில் இணைந்து கொள்ளும் முன்னர் குழு படம் எடுத்துகொண்டார்.