14th December 2019 13:05:17 Hours
இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களது எண்ணக்கருவிற்கமைய யாழ் பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் ருவன் வணிகசூரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் அமெரிக்காவை வதிவிடத்தை கொண்டுள்ள நன்கொடையாளியான டொக்டர் சுகுமார் நாஹேந்திரன் அவர்களது நிதி அனுசரனையுடன் படையினரது கட்டிட நிர்மான பணிகளுடன் அரியாலையிலுள்ள சன்முகா பூம்புகார் முன்பள்ளி கட்டிட நிர்மான பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
52 ஆவது படைப் பிரிவின் கீழுள்ள 523 ஆவது படைத் தலைமையகத்திற்குரிய 12 ஆவது கெமுனு ஹேவா படையணி மற்றும் 5 ஆவது பொறியியல் சேவைப் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் இந்த முன்பள்ளி கட்டிடம் நிர்மானிக்கப்பட்டு இம் மாதம் (12) ஆம் திகதி நன்கொடையாளியான டொக்டர் சுகுமார் நரேந்திரன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் 52 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் சேன வடுகே, 523 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரொஹான் ராஜபக்ஷ, இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் இணைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும். latest jordans | Nike Shoes, Sneakers & Accessories