Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th July 2018 06:01:06 Hours

புதிய 61 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பதவியேற்பு

வன்னி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் உள்ள 61 ஆவது படைப் பிரிவிற்கு புதிய படைத் தளபதியாக பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்கள் நியமிக்கப்பட்டார்.

புதிதாக படைத் தலைமையகத்திற்கு வருகை தந்த படைத் தளபதியை இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணியினர் வரவேற்றனர்.

அதன் பின்னர் சமய ஆசிர்வாத பூஜைகளுடன் தனது கடமையை உத்தியோகபூர்வமாக கையொப்பமிட்டு பாரமேற்றார்.

அதனை தொடர்ந்து தலைமையக வளாகத்தினுள் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றது. பின்னர் படையினர் மத்தியில் உரையை நிகழ்த்தினார். இந் நிகழ்விற்கு இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் படை வீர ர்கள் இணைந்திருந்தனர். latest Running | FASHION NEWS