Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th December 2023 19:19:32 Hours

பிரிகேடியர் எச்டிடபிள்யூ வித்யானந்த அவர்கள் ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக கடமை பொறுப்பேற்பு

கஜபா படையணியின் பிரிகேடியர் எச்.டி.டபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் இராணுவத் தலைமையகத்தின் ஆளனி நிர்வாக பணிப்பகத்தின் புதிய பணிப்பாளராக செவ்வாய்க்கிழமை (7) கடமை பொறுப்பேற்றார்.

பிரிகேடியர் எச்டிடபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் கோட்டே ரஜ மகா விகாரையின் பீடாதிபதி வண (கலாநிதி) அலுத்நுவர அநுருத்தநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்க உறுப்பினர்களின் மத அனுஷ்டானங்களுக்குப் மத்தியில் உத்தயோகபூவ ஆவணத்தில் கையெழுத்திட்டு தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். புதிய அலுவலகத்தை ஆசிர்வதிக்கும் நிமித்தம் தேரர்களால் செத்பிரித் பாராயணம் செய்யப்பட்டதுடன் தர்மசொற்பொழிவினை தொடர்ந்து ‘அட்டபிரிகர’ வழங்கப்பட்டது.

இந் நிகழ்வில் பணிப்பகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், பணி நிலை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்து கொண்டதுடன், பணிப்பகத்தின் அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுடன் நிகழ்வின் நினைவுகளைச் சேர்க்கும் வகையில் குழு படங்களும் எடுக்கப்பட்டன.

பிரிகேடியர் எச்டிடபிள்யூ வித்யானந்த ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் தற்போதைய பதவியை ஏற்கும் முன், கஜபா படையணி தலைமையகத்தில் நிலைய தளபதியாக கடமையாற்றினார் என்பது குறிப்பிடதக்கதாகும்.

இப்பதவியினை வகித்த பிரிகேடியர் கே.ஏ.யு கொடித்துவக்கு ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சீ ஐஜி அவர்கள் தற்போது 12 வது காலாட் படைப்பிரிவின் பிரதி தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.