Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

04th July 2019 15:44:29 Hours

பிரதி பதவி நிலை பிரதானியாக மேஜர் ஜெனரல் குமுது பெரேரா நியமிப்பு

இலங்கை சிங்கப் படையணியைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் இலங்கை இராணுவத்தின் புதிய பிரதி பதவி நிலை பிரதானியாக இன்று காலை (4) ஆம் திகதி உத்தியோகபூர்வமாக தனது கடமை பொறுப்பை சமய ஆசிர்வாத அனுஷ்டானங்களின் பின்பு பொறுப்பேற்றார்.

வன்னி பாதுகாப்பு படைத் தளபதியாக கடமை வகித்த இவர் இடமாற்றத்தின் பின்பு இந்த பிரதி பதவி நிலை பிரதானி பதவிக்கு நியமிக்கப்பட்டார்.

இந்த அதிகாரியின் புதிய பதவியேற்பு நிகழ்வில் இராணுவ பொது நிர்வாக பிரதானி, நிறைவேற்று பணிப்பாளர் நாயகம், இராணுவ செயலாளர் நாயகம், நிதி மேலாண்மை பணிப்பாளர் நாயகம், போர்கருவி பணிப்பாளர் நாயகம், பயிற்சி பணிப்பாளர் நாயகம் போன்ற உயரதிகாரிகள் இணைந்திருந்தனர்.

மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்களது சுயவிபரங்கள் கீழ்வருமாறு மேஜர் ஜெனரல் குமுது பெரேரா அவர்கள் மாத்தளை புனித தோமஸ் கல்லூரி, கண்டி கிங்ஷ்வூட் கல்லூரி, இரத்தினபுரி புனித அலோசியஷ் கல்லூரி, தெனியாய மத்திய கல்லூரி மற்றும் கொழும்பு இசிபதான கல்லூரியில் கல்விகளை மேற்கொண்டு 1984 ஆம் ஆண்டு இராணுவத்தில் பிரிவு 19 கீழ் கெடெற் அதிகாரியாக இணைந்து பயிற்சி நிறைவின் பின்பு இரண்டாம் லெப்டினன்ட் தரத்தில் முதலாவது சிங்கப் படையணியில் இணைந்தார். பின்பு பிளட்டுன் கொமாண்டர், கம்பனி கொமாண்டர், 9 சிங்கப் படையணியில் 2 பிரதி கட்டளை அதிகாரியாகவும், 1 ஆவது சிங்கப் படையணியில் கட்டளை அதிகாரியாகவும், பயிற்சி பணியகத்தின் பதவநிலை 11 உத்தியோகத்தர் தரத்திலும், இராணுவ திட்டமிடல் பணியகத்தின் 1 உத்தியோகத்தர் தரத்தில் 2001 ஆம் ஆண்டுகளிலும், இராணுவ தலைமையக செக்டர் தளபதியாகவும், 55 ஆவது படைப் பிரிவில் 2004 – 2005 ஆம் ஆண்டுகளில் பதவிநிலை கேர்ணல் தரத்திலும், 551 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதியாக 2005 ஆம் ஆண்டுகளிலும் கடமை வகித்துள்ளார்.

2007 ஆம் ஆண்டு இராணுவ பயிற்சி பணிப்பாளராகவும், 2010 – 2013 வரை சுபசாதனை பணியகத்தின் பணிப்பாளராகவும், இராணுவ எகடமியின் கட்டளை தளபதியாகவும், 51, 59 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதியாகவும், சீனாவில் பாதுகாப்பு பல்கலைக்கழக பட்டப்படிப்பையும் மேற்கொண்டுள்ளார்.

இவருக்கு ரணவிக்ரம பதக்கம், ரன சூர பதக்கம், உத்தம சேவா பதக்கங்கள் இவரது சேவையை கௌரவித்து இராணுவத்தினால் வழங்கப்பட்டுள்ளது. இவர் திருமதி சிரோமி மாசகோரலா அவர்களை திருமணம் செய்து இவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர்.