Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th July 2018 09:53:45 Hours

பாலர் பாடசாலை கட்டுமான பணிகள் ஆரம்பம்

இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடன் ஹேமாஸ் அவுட்ரீச் அமைப்பின் அனுசரனையில் வவுனியா மகாகச்சகொடிய கிராமத்தில் பாலர் பாடசாலை அமைப்பதற்கான கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா (20) ஆம் திகதி வெள்ளிக் கிழமை இடம்பெற்றன.

56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரபாத் தெமடம்பிடிய அவர்களின் தலைமையில் இந்த நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டன.

இந்த நிகழ்விற்கு வன்னி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் குமுது பெரேரா56 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி பிரிகேடியர் பிரபாத் தெமடம்பிடிய, 563 ஆவது படைத் தலைமையகத்தின் கட்டளை தளபதி பிரிகேடியர் ரஞ்சன் பிரேமலால், ஹேமாஸ் குரூப் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் திருமதி சிரோமி மஸ்கோரலா,‘ஸ்பீட்மார்க்’ ட்ரான்ஸ்போட் தனியார் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் சுனில் மல்வான அவர்களும் வருகை தந்தனர். Adidas shoes | FASHION NEWS