Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th January 2022 10:11:35 Hours

பாதுகாப்பு சேவைக் கல்லூரியின் 15 வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு விஷேட வழிபாடுகள்

கொழும்பு 02 இல் அமைந்துள்ள பாதுகாப்பு சேவைக் கல்லூரியின் 15 வது ஆண்டு பூர்த்தி தினத்தை முன்னிட்டு, நாடு, மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு ஆசி வேண்டி புதன்கிழமை (19) மாலை இரவு நேரம் முழுவதுமாக பிரித் பாராயணம் செய்யும் வழிபாட்டு நிகழ்வு நடைபெற்றது.

பாதுகாப்பு சேவைக் கல்லூரி அதிபரின் அழைப்பின் பேரில் பாதுகாப்புச் செயலாளர் (ஓய்வு) ஜெனரல் கமால் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அத்ட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்ததோடு, பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் வழிபாடுகளில் ஈடுபட்டனர். இதன்போது மகா சங்கத்தினரால் சொற்பொழிவுகளும் நிகழ்த்தப்பட்டன.

கல்லூரி அதிபர் மற்றும் பாதுகாப்பு சேவைக் கல்லூரியின் பௌத்த சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மேற்படி சிறப்பு நிகழ்வின் போது பிக்குகள் பிரித் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டதோடு, மலாய் வீதியில் பயணித்த மேற்படி ஊர்வலத்தில் பாதுகாப்பு சேவைக் கல்லூரியின் மாணவர்கள், பெற்றோர்கள், கலைஞர்கள் மற்றும் நிர்வாகப் பணியாளர்கள் ஆகியோரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வின் இறுதி அம்சமாக இன்று (20) காலை மகா சங்கத்தினருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் இராணுவ உயர் அதிகாரிகள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

பாதுகாப்பு சேவைக் கல்லூரி 17 ஜனவரி 2007 இல் இராணுவ மற்றும் பொலிஸ் பணியாளர்களின் பிள்ளைகளுக்காக நிறுவப்பட்ட ஒரு தேசிய கல்லூரியாகும். 1860 ஆம் ஆண்டில் இலங்கை ரைபிள் படையணி தலைமையகத்தின் ஒரு பகுதியாக கொழும்பு கொம்பனித் தெருவில் இக் கல்லூரி நிறுப்பட்டது.