08th October 2018 13:10:58 Hours
பாகிஸ்தான் மற்றும் இலங்கை இராணுவ அணிகளுக்கு இடையிலான டி – 20 50 ஓவர் கிரிக்கட் போட்டிகள் ஒக்டோபர் மாதம் 7 – 20 ஆம் திகதி வரை குஜரான்வல, ரவல்பின்டி மற்றும் ஹடாபி சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகின்றன.
இந்த போட்டிகள் இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்களது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டன. இலங்கை இராணுவ கிரிக்கட் அணியைச் சேர்ந்த 16 கிரிக்கட் வீர ர்கள் இந்த போட்டியில் பங்கேற்றிக் கொள்வதற்காக (6) ஆம் திகதி சனிக் கிழமை பாகிஸ்தானுக்கு சென்றார்கள்.
இலங்கை இராணுவ கிரிக்கட் அணியிலிருந்து ஆனைச்சீட்டு உத்தியோகத்தர் 1 சீக்கேகு பிரசன்ன மற்றும் ஆனைச்சீட்டு உத்தியோகத்தர் 11 அசேல குணரத்ன அவர்களது தலைமையில் இலங்கை இராணுவ கிரிக்கட் அணி சென்றது.
இந்த கிரிக்கட் வீரர்களை இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக அவர்கள் ஊக்குவித்து உரைகளை நிகழ்த்தி அனுப்பி வைத்தார்.
மேலும் இராணுவ தளபதி இந்த இராணுவ கிரிக்கட் வீரர்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார். Buy Kicks | Fullress , スニーカー発売日 抽選情報 ニュースを掲載!ナイキ ジョーダン ダンク シュプリーム SUPREME 等のファッション情報を配信!