Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

04th January 2024 19:08:25 Hours

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளர் கண்டி விஜயம்

பாகிஸ்தான் பாதுகாப்பு செயலாளரான லெப்டினன் ஜெனரல் ஹமூத் உஸ் ஜமான் கான் (ஓய்வு) அவர்கள் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டிற்கு வருகை தந்துள்ளதுடன், அவர் ஜனவரி 02 ஆம் திகதி கண்டி பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டார். மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியின் வழிக்காட்டலின் கீழ் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தினரால் இவ்விஜயம் நேர்த்தியாக ஒருங்கிணைக்கப்பட்டது.

விஜயத்தின் முடிவில், இரண்டு நாடுகளுக்கிடையிலான பரஸ்பர மரியாதை மற்றும் பாராட்டுதலைக் குறிக்கும் வகையில், வருகை தந்திருந்த பாகிஸ்தானின் பாதுகாப்பு செயலாளருக்கு, மத்திய பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி நினைவுச் சின்னத்தை வழங்கினார்.

இவ் விஜயத்தில் 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.