Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th June 2024 21:19:53 Hours

பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் இராணுவ பயிற்சி பாடசாலைக்கு விஜயம்

பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் கேஎம்பீஎஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் 05 ஜூன் 2024 அன்று இராணுவ பயிற்சி பாடசாலைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் அவர்களை இராணுவ பயிற்சி பாடசாலையின் தளபதி பிரிகேடியர் கேடீபீ டி சில்வா ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் மரியாதையுடன் வரவேற்றார். பின்னர், இராணுவ பயிற்சி பாடசாலையின் பங்கு மற்றும் அதன் பயிற்சித் திட்டங்களின் பல்வேறு செயல்பாட்டு அம்சங்கள் பற்றிய விரிவான விளக்கத்தை தளபதி சிரேஷ்ட அதிகாரிக்கு வழங்கினார்.

அன்றய விஜயத்தை நினைவுகூரும் வகையில், பயிற்சிப் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகம் முகாம் வளாகத்தில் மரக்கன்று நாட்டியதுடன்,குழுப் படமும் எடுத்துக் கொண்டார். இந்த விஜயத்தின் போது, தளபதி, பணிநிலை அதிகாரிகள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கு உரையாற்றிய அவர், முகாம் வளாகத்தையும் சுற்றிப் பார்வையிட்டார்.