Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th December 2021 16:22:19 Hours

படையினர் வீதியோரங்களில் 'மருத' மரக்கன்றுகள் நடுகை

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 233 வது பிரிகேட் சிப்பாய்களால் இராணுவ தளபதியவர்களின் எண்ணக்கருவுக்கு அமைவான சூற்றாடல் நட்புறவு திட்டமான “துரு மித்துரு நவ ரட்டக்” திட்டத்தின் கீழ் கயர்கேணி வீதியோர பகுதிகளில் வௌ்ளிக்கிழமை (03) மர நடுகை வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையக தளபதியவர்களின் அறிவுரைக்கமைய 233 வது பிரிகேட் தளபதி கேணல் வசந்த ஹேவகே அவர்களின் மேற்பார்வையில் 233 வது பிரிகேடின் ஒருங்கிணைப்பின் கீழ் 6 வது கஜபா படையணி சிப்பாய்களால் மருத மர நடுகை திட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ் 100 மருத மரக் கன்றுகள் A 15 வீதியின் இரு பக்கங்களிலும் சிப்பாய்களால் நாட்டி வைக்கப்பட்டன.