14th December 2023 19:18:22 Hours
மன்னார் அரச வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் இ.ஜே.புஷ்பகாந்தனின் வேண்டுகோளுக்கு இணங்க மன்னார் தல்லடி 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையக படையினர் 12 டிசம்பர் 2023 அன்று மன்னார் வைத்தியசாலையில் உள்ள நோயாளிகளுக்கு இரத்த்தானம் வழங்கினர்.
இந்த சமூகம் சார்ந்த திட்டத்திற்காக 54 வது காலாட் படைப்பிரிவு தலைமையகத்தின் 75 அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் தங்கள் இரத்தத்தை தானம் செய்தனர். 54 வது காலாட் படைப்பிரிவு தளபதி கேஎம்எஸ்பி குலதுங்க ஆர்எஸ்பீ என்டிசி பீஎஸ்சி அவர்கள் இத்திட்டதின் வெற்றிக்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கியதோடு அதை நெருக்கமாக மேற்பார்வையிட்டார்.
இம் மருத்துவ முகாமின் போது மன்னார் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகளினால் 33.3 லீற்றர் இரத்தம் சேகரிக்கப்பட்டது.