Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

logo logo logo

07th October 2019 14:00:05 Hours

படையினரது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 65, 651, 652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்ட சிறுவர் தின நிகழ்வுகள் இம் மாதம் (1) ஆம் திகதி இடம்பெற்றன.

651 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 கஜபா படையணியின் ஏற்பாட்டில் அன்னை திரேசா முன்பள்ளியைச் சேர்ந்த 35 சிறார்களுக்கு பரிசு பொதிகள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன. இந்த நிகழ்வில் 4 ஆசிரியர்கள் மற்றும் 40 சிவிலியன்கள் இணைந்திருந்தனர்.

652 ஆவது படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டினால் அன்னவிளன்டன்குளம் அமெரிக்கா மிஷன் முன்பள்ளி மற்றும் அமிதயபுர முன்பள்ளியைச் சேர்ந்த 99 சிறார்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

மேலும் 652 ஆவது படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 10 ஆவது இலேசாயுத காலாட் படையணியின் பூரன ஒத்துழைப்புடன் கொல்லவிளான்குளம் மாரன் முன்பள்ளியைச் சேர்ந்த சிறார்களுக்கு புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்த நிகழ்வுகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களது வழிக்காட்டலின் கீழ் 65 ஆவது படைப் பிரிவின் படைத் தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமாரப்பெரும அவர்களது தலைமையில் இடம்பெற்றன.