Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th August 2019 16:30:54 Hours

படையணித் தலைமையக சார்ஜன்ட் மேஜர்கள் ஐவருக்கு சான்றிதழ்கள் வழங்கி வைப்பு

தமது சேவைக்கால நிறைவில் ஓய்வைப் பெறவிருக்கும் படையணித் தலைமையக சார்ஜன்ட் மேஜர்கள் ஐவருக்கு அவர்களது சேவைப் பாராட்டிற்கான சான்றிதழ்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சோனாநாயக்க அவர்களின் தலைமையில் கடந்த செவ்வாயக் கிழமை (13) இராணுவத் தளபதியவர்களின் காரியாலயத்தில் வைத்து வழங்கப்பட்டது.

அந்த வகையில் இவர்களது இராணுவ சேவைக்காலத்தில் நடவடிக்கை மற்றும் நிர்வாக செயற்பாடுகளை சிறந்த முறையில் ஆற்றிய உண்ணதமான சேவையையை வழங்கியமைக்காக இவர்களுக்கான பாராட்டுக்களை வழங்கும் நோக்கில் சான்றிதழ்கள் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநயக்க அவர்களால் வழங்கப்பட்டது.

இதன் போது இவர்களுடன் கலந்துரையாடிய இராணுவத் தளபதியவர்கள் இவர்களது எதிர்கால செயற்பாடுகள் தொடர்பாக வினவினார். அதன் பின்னர் இராணுவத் தளபதியவர்கள் இவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

அதன் பின்னர் இராணுவத் தளபதியவர்களை சந்தித்த ஓய்வு பெறவுள்ள படையணித் தலைமையக சார்ஜன்ட் மேஜர்கள் தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.

இந் நிகழ்வில் தனியார் நிர்வாக பணிப்பக பணிப்பாளரான பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர அவர்கள் கலந்து கொண்டார். Authentic Sneakers | 【11月発売予定】シュプリーム × ナイキ エアフォース1 全3色 - スニーカーウォーズ