Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th November 2017 08:30:49 Hours

படையணிகளுக்கு இடையில் நடைப்பெற்ற கிரிக்கெட் போட்டியில் பீரங்கிப் படையணிக்கு வெற்றி

படையணிகளுக்கு இடையில் நடைப் பெற்ற இறுதி கிரிக்கெட் போட்டியின் பரிசு வழங்கம் நிகழ்வு கடந்த வியாழக்கிழமை பிற்பகல் (09)ஆம் திகதி சூரியவேவ சர்வதேச விழையாட்டு மைதானத்தில் இடம் பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதான விருந்தினராக இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரால் அமால் கருணாசேகர அவர்கள் கலந்து கொண்டு பரிசுகளும் வழங்கினார்

அதன்படி போட்டியின் முடிவில் இலங்கை இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரால் அமால் கருணாசேகர அவர்களால் வெற்றிப் பெற்ற விரர்களுக்கு சான்றிதல்களும் வெற்றிக்கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

தொடர்ந்து இராணுவ கிரிக்கெட் கழகத்தின்; தலைவர் மேஜர் ஜெனரால் பிரியந்த ஜயசுந்தர அவர்கள் வெற்றியாளர்களுக்கு பரிசுகளை வழங்கினர்.

இந்த போடடியில் மொத்தமாக 19 கிரிக்கெட் அணிகள் பங்குபற்றின இதில் (ஏ குழுவினர் பீ குழுவினர் மற்றும் மகளிர் குழுவிலும்) இலங்கை இராணுவ பீரங்கிப் படையணியையும் ஒருவாரங்களுக்கு முன் இறுதி போட்டிகளில் போட்டியிட ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன. இப் போட்டியில் பீரங்கிப் படையணி வெற்றியை தனதாக்கி கொண்டது.

இதில் பி குழுவினர்களான கெமுனு படையணியினர் சிறந்த விளையாட்டு வீரர்களாகவும்,கஜபாபடையணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

கடந்த பெப்பரவரி (22)-மார்ச் (03)ஆம் திகதிகளில் பனாகொடை பீரங்கிப் படை விளையாட்டு மைதானத்தில் நடைப் பெற்ற 20/20 மகளிர் கிரிக்கெட் போட்டியில் 4(மகளிர்)படையணியினர்

சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாவும் 6(மகளிர்) படையணியினர் இரண்டாம் இடத்தையும் பெற்றுக் கொண்டனர்.

போட்டி இறுதியில் வெற்றி பெற்ற வீர வீராங்கனைகளுக்கு உயர் அதிகாரிகளினால் சான்றிதல்களும் வெற்றிக் கிண்ணங்களும் வழங்கப்பட்டது.

Nike shoes | Sneakers