Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

05th December 2021 18:00:44 Hours

படைப்பிரிவுத் தளபதி அவர்களின் சொந்த முயற்சியில் ஒரே குடும்பத்தின் இரண்டு அனாதரவான மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் நன்கொடை

65 வது படைப் பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க வவுனிக்குளம் பாலிநகர் பிரதேசத்தில் வசிக்கும் வறுமை கோட்டின் கீழ் உள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த அனாதை மாணவர்களான சகோதரி மற்றும் சகோதரர் ஆகிய இருவருக்கும் உயர் கல்விக்காக புலமைப்பரிசில் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

65 வது படைப் பிரிவின் தளபதி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, அவுஸ்திரேலியாவில் வசிக்கும் அவரது சகோதரியான திருமதி கே.ஏ சிரானி அவர்களினால் பலிநகர் பாடசாலையில் தரம் 8 இல் கல்வி கற்கும் பிரதீபன் கிருஷாலனிக்கு உயர்தரம் வரை கல்வி கற்க மாதாந்தம் ரூபாய் 5000.00 புலமைப்பரிசில் வழங்க முன்வந்தார். மற்றும் திரு எரங்க ஜயக்கொடி, கொல்லவிளாங்குளம் அரச தமிழ் கலவன் பாடசாலையில் தரம் 3 இல் கல்வி கற்கும் பிரகீத் தினோதீபனுக்கு சாதாரண தரம் வரை கல்வி கற்க மாதாந்தம் 3000 ரூபாய் புலமைப்பரிசில் வழங்க முன்வந்தார் என்பது குறிப்பிடதக்க விடயமாகும்.

இந்த இரண்டு மாணவர்களும் தங்கள் பெற்றோர் அவர்களை விட்டுச் சென்ற பின்னர் தனது பாட்டியின் அரவணைப்பில் பராமரிக்கப்பட்டு வருகின்றார்கள். 65 வது படைப் பிரிவின் தளபதி மற்றும் 652 வது பிரிகேட் தளபதி, 652 வது பிரிகேட் சிவில் விவகார அதிகாரி ஆகியோர் இணைந்து அந்த இரண்டு நிதி நன்கொடைகளை 2021 நவம்பர் 30 ஆம் திகதி பாலிநகர் பாடசாலையில் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் பயனாளிகளுக்கு வழங்கினர்.

652 வது பிரிகேட் தளபதி பிரிகேடியர் சஞ்ஜீவ வனசேகர அவர்களின் மேற்பார்வையின் கீழ் 10 வது இலங்கை இராணுவ காலாட் படையணியின் கட்டளை அதிகாரியினால் இந் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.