Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th February 2024 12:44:44 Hours

நெதர்லாந்து பிரதி தூதுவர் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம்

இலங்கைக்கான நெதர்லாந்து இராச்சியத்தின் பிரதித் தூதுவர் கௌரவ இவான் ருட்ஜென்ஸ் அவர்கள் புதன்கிழமை (பெப்ரவரி 07) யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையகத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.

வருகை தந்த பிரதித் தூதுவரை யாழ் பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜி டபிள்யூ டபிள்யூ டபிள்யூ எம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் அன்புடன் வரவேற்றார்.

இந்த சந்திப்பின் போது, யாழ் தளபதி, மற்றும் பிரதி தூதுவர் இருவரும் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்துதல் மற்றும் இராணுவ இராஜதந்திரம் ஆகியவற்றின் முக்கியத்துவம் மற்றும் சிவில்-இராணுவ ஒத்துழைப்பு, சமூக நலத்திட்டங்கள், அபிவிருத்தி உதவிகள் தொடர்பாக கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

கௌரவ இவான் ருட்ஜென்ஸ் அவர்கள் யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்ததன் முக்கியத்துவத்தைக் குறிக்கும் வகையில் அதிதிகள் பதிவேட்டில் தனது எண்ணங்களை பதிவிட்டதுடன். அதனைத் தொடர்ந்து நினைவுச் சின்னங்கள் பரிமாற்றிக் கொள்ளப்பட்டன. இலங்கையில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகாரங்கள் தொடர்பான சிரேஷ்ட கொள்கை ஆலோசகர் திரு நாமல் பெரேரா மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் பலரும் இந்த சுமுகமான உரையாடலில் பங்குபற்றினர்.