Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

28th October 2018 21:40:02 Hours

நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கஜபா படையணியின் இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு புதிய வீடு

இராணுவ படைத் தலைமையகத்தின் நிறைவேற்று அதிகாரியான கஜபா படையணியின் படைத் தளபதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் ஆலோசனைக்கமைய அனைத்து இராணுவ அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கஜபா படையணியின் இராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு புதிய வீடு நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.

1999 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி பரந்தன் பிரதேசத்தில் ஏற்பட்ட யூத்ததின் போது பயங்கரவாத தாக்குதலில் தனது தாய் நாட்டிற்காக தனது உயிரை தியாகம் செய்த 6ஆவது கஜபா படையணியின் சாஜன் ஈ.எம் கீர்த்திரத்ன வீரரின் குடும்பத்தினருக்காக ஹொரன,கோனபல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய வீட்டின் திறப்பு கையழிக்கும் நிகழ்வானது (26) ஆம் திகதி வெள்ளிக்கிழமை கஜபா படையணியின் தளபதி அவர்களின் தலைமையில் இடம் பெற்றது. இவ் வீட்டு நிர்மாண பணிகள் கஜபா படையணியின் படையினர் மற்றும் அனைவரினதும் ஒத்துழைப்புடன் தொழிநுட்பவியளாலர்களின் உதவியுடன் நிர்மாணபணிகள் மேற் கொள்ளப்பட்டன.

இந் நிகழ்வில் கஜபா படையணியின் சேவாவனிதாவின் தலைவியான திருமதி சுஜீவா நெல்சன், கஜபா படையணியின் சாஜன் ஈ.எம் கீர்த்திரத்ன அவர்களின் துணைவி, மற்றும் குழந்தைகள், உறவினர்கள், கஜபா படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள் படையினர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.jordan release date | Jordan Release Dates , Iicf