Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

03rd May 2021 13:00:23 Hours

திருகோணமலை மாவட்ட கொவிட் ஒருங்கிணைப்புக் குழு தற்போதைய நிலை தொடர்பாக ஆராய்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் புதன்கிழமை (28) கொவிட் 19 தொற்றுநோயைத் தடுப்பதற்கான திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு திருகோணமலை மாவட்டச் செயலாளர் திரு சமன் தர்ஷன படிகோரல மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பு அதிகாரியும் 22வது படைப்பிரிவு தளபதி மேஜர் ஜெனரல் சமந்த சில்வா தலைமையில் கூடியது.

தொற்றுநோயின் தற்போதைய 3 வது அலையின் பரவலை தணிக்க திருகோணமலை மாவட்டத்தில் பாதுகாப்பு தரப்பினருடன் இணைந்து மேற்கொண்டு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மேஜர் ஜெனரல் சமந்த சில்வா பங்குதாரர்களுடன் ஒரு நீண்ட கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இது தொடர்பாக முறையான பொறிமுறையை செயல்படுத்தல் தொடர்பாக பாதுகாப்பு படைகள், அரச மற்றும் சுகாதார அதிகாரிகளிடம் சிறப்பு கவனம் செலுத்தினார்.

221, 222 மற்றும் 223 பிரிகேட்களின் தளபதிகள், கந்தளாய் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்சுகாதார திருகோணமலை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், திருகோணமலை வைத்தியசாலையின் பணிப்பாளர், திருகோணமலை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் மற்றும் திருகோணமலை அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோரும் மேற்படி மாநாட்டில் பங்கேற்றனர்.