Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்கள்

18th February 2021 19:02:20 Hours

தளபதி மாவட்ட முன்னாள் படைவீரர்களின் ரணவீரு அமைப்புகளின் படைவீரர்களிடம் நலன்புரி விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல்

22 நிர்வாக மாவட்டங்களின் ரணவீரு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள், பாதுகாப்பு படைத் தலைமையக பொறுப்பதிகாரிகள் மற்றும் சிவில் விவகார அதிகாரிகள் உட்பட சுமார் 100 பேர் இன்று (18) படைவீரர்கள் விவகார பணிப்பகத்தின் ஏற்பாட்டில் இராணுவ தலைமையகத்தில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியும் கொவிட் 19 பரவலைத் தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களை சந்தித்தனர். இதன் பேபாது மரியாதைக்குரிய சமூக அங்கீகாரத்தைத் தக்க வைத்துக் கொள்ளல், தேசிய பொருளாதாரம் மற்றும் இராணுவத்தின் முன்னேற்றத்திற்கு பங்களித்தல் , சட்ட விரோத விடயங்களில் பலியாதல் மற்றும் நலன்புரி விடயங்கள் தொடர்பாக கருத்து தெரிவித்தார்.

இங்கு காயமடைந்த மற்றும் மறைந்த படைவீரர்களுக்கு ரணவீரு அதிகார சபை போன்று முன்னாள் இராணுவ படைவீரர்கள் விவகார பணிப்பகம் பல்வேறு நலன்புரி தேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இவை மாவட்ட செயலகங்கள் மூலம் செயல்படுத்தப்படுகின்றன. ஜனாதிபதியின் நோக்கின் பிரகாரம் நீங்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பெறப்பட்ட தொழில்நுட்ப திறன்களைப் பயன்படுத்தி சுயதொழில் செய்வதன் மூலமும், வருமானம் ஈட்டக்கூடிய பல்வேறு தயாரிப்புகளை உருவாக்குவதன் மூலமும் தேசிய வளர்ச்சியை ஊக்குவிக்கும் திறனை நீங்கள் இன்னும் கொண்டிருக்கிறீர்கள். எனவே, ஓய்வூதியத்தில் ஒழுக்கமான பிரஜையாக நீங்கள் அனைவரும் முன்னணியில் இருந்து அந்த சேவைகளைத் தொடர வேண்டியது கட்டாயமாகும், கடினமாக உழைப்பில் தொழில் ரீதியாக பெற்றுக் கொண்ட புகழைக் கெடுக்க யாரையும் அனுமதிக்க கூடாது என ஜெனரல் ஷவேந்திர சில்வா வழியுறுத்தினார்.

உங்களுக்கு தெரியும் ஒவ்வொரு நிறுவனத்திக்கும் நோக்கமும் திட்டமும் காணப்படும் அந்த வகையில் எமது இராணுவத்தின் முனோக்கிய மூலோபாய திட்டம் 2020 – 2025 இல் ஓய்வு பெற்ற படையினரின் நலன்புரி விடயங்கள், தேசிய பொருளாதாரத்திற்கு வலு சேர்க்கும் வகையிலான பல வருமானம் ஈட்டும் திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. சேவை காலத்தில் நீங்கள் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் எப்போதுமே அதற்கான அங்கீகாரத்தை அளிக்கின்றன. மேலும் வெவ்வேறு நிகழ்ச்சி நிரல்களுக்கு இரையாகாமல் உங்கள் சகோதரர் படைவீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு பங்கம் ஏற்படாத வகையிலும் அதிக சமூக நலனுக்காகவும் நற்பணி பணி தொடர வேண்டும் என இராணுவத் தளபதி கேட்டுக் கொண்டார்.

இராணுவத் தளபதி கலந்துரையாடல் மண்டபத்திற்கு வருகைத் தந்த போது பிரதி பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் வசந்த மடோல வரவேற்றார். பின்னர் ஒரு நிமிடம் மௌனஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து இராணுவப் பாடலை இசைக்கப்பட்டதுடன் இராணுவத் தளபதி உரையாற்றினார். வன்னி பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹேமந்த பண்டார, கிழக்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் வசந்த அப்ரூ மற்றும் மேற்கு பாதுகாப்புப் படை தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் குமார ஜெயபதிரண ஆகிய மாவட்ட ரணவீரு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு அதிகாரிகளும் விடயத்துடன் தொடர்புடைய சிரேஸ்ட அதிகாரிகள் மற்றும் சிவில் விவகார அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். Running Sneakers Store | Nike News