Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

08th June 2020 17:34:47 Hours

தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் 5,136 நபர்கள் உள்ளாரென கோவிட் மையம் தெரிவிப்பு

புனானை தனிமைப்படுத்தப்பட்ட மையத்திலிருந்து தனிமைப்படுத்தலின் பின்பு 2 நபர்கள் சுகாதார சான்றிதழ்களுடன் இன்று (9) ஆம் திகதி தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோவிட் – 19 தேசிய தடுப்பு மையத்தின் அறிக்கையை இராணுவ பேச்சாளரான பிரிகேடியர் சந்தன விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்தார்.

அத்துடன் முப்படையினரால் பராமரித்து வரும் தனிமைப்படுத்தப்பட்ட மையங்களிலிருந்து இன்று வரைக்கும் 12,419 நபர்கள் தனிமைப்படுத்தலின் பின்பு தங்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நாடாளவியல் ரீதியாக முப்படையினரால் நிர்வாகித்து வரும் 43 தனிமைப்படுத்தப்பட்ட மையங்களில் தற்போது 5,136 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை கொரோனா வைரஸ் தொற்று நோய்க்கு உள்ளாகியிருந்த நபர்களில் 8 பேர் குவைத்திலிருந்து வந்தவர்களென்றும், 4 பேர் இந்தியாவிலிருந்து வந்தவர்களென்றும், 10 பேர் கடற்படையைச் சேர்ந்தவர்கள் என்று ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை இராணுவ பேச்சாளர் அவர்கள் வெளியிட்ட அறிக்கை வீடியோ காட்சிகளை இணையதளத்தில் காணலாம். Sports brands | Air Jordan 1 Retro High OG University Blue - Gov