Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

21st January 2022 19:27:40 Hours

சேவை வனிதையர் பிரிவின் தலைவியினால் சிவில் பாதுகாப்பு திணைக்கள பணியாளர்களின் பிள்ளைகளுக்கு ஊக்குவிப்புத் தொகை வழங்கி வைப்பு

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சேவையில் உள்ள மற்றும் மரணித்த பணியாளர்களது பிள்ளைகளுக்கு வருடாந்த கற்றல் உபகரணங்களை பகிர்ந்தளிக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (20) பத்தரமுல்ல ‘சுஹுருபாய’ வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவகே சிவில் பாதுகாப்பு திணைக்கள சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி உபேந்திரா லமாஹேவகே ஆகியோரின் அழைப்பின் பேரில் இராணுவ சேவை வனிதையர் பிரிவின் தலைவி திருமதி சுஜீவா நெல்சன் பரிசளிப்பு விழாவின் பிரதம அதிதியாக கலந்து கொண்டனர்.

இலங்கை கடற்படை மற்றும் விமானப்படை சேவா வனிதையர் பிரிவுகளின் தலைவியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டதுடன், கலை நிகழ்வுகளை கண்டு மகிழ்ந்ததை தொடர்ந்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலை புத்தகங்கள், பயிற்சி புத்தகங்கள், காலணிகள் மற்றும் சில மடிக்கணினிகளையும் பகிர்ந்தளித்தனர்.

பிரதம அதிதியாக திருமதி சுஜீவா நெல்சன் அவர்கள் கடற்படை மற்றும் விமானப்படை சேவா வனிதையர் பிரிவுகளின் தலைவிகளுடன் இணைந்து சிவில் பாதுகாப்பு திணைக்கள பணியாளர்களின் குடும்ப மாணவர்களுக்கு ஊக்குவிப்பு தொகையினை வழங்கி வைத்தார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் (ஓய்வு) ரஞ்சன் லமாஹேவகே, மற்றும் சிவில் பாதுகாப்பு திணைக்கள சேவை வனிதையர் பிரிவு தலைவி திருமதி உபேந்திரா லமாஹேவகே, இராணுவ சேவா வனிதையர் பிரிவின் பிரிகேடியர் ஒருங்கிணைப்பு பிரிகேடியர் சுமேத பாலசூரிய, , சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் மட்டுபடுத்தப்பட்ட எண்ணிக்கையிலானோரின் பங்கேற்புடன் இந்நிகழ்வு இடம்பெற்றுது.