Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th February 2024 18:10:25 Hours

சுகாதார பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக வைத்தியசாலை இயல்பு நடவடிக்கைகளில் படையினர்

பல கோரிக்கைகளை முன்வைத்து நாடளாவிய ரீதியில் அரச வைத்தியசாலைகளில் சுகாதார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள பணிப்புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இடையூறுகள் இன்றி வைத்தியசாலை நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக இலங்கை இராணுவம் இன்று (13 பெப்ரவரி 2024) மீண்டும் நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளுக்கு படையினரை அனுப்பியுள்ளது. அதற்கமைய சுகாதார சேவைகளை தொடர்ச்சியாக பேணுவதை நோக்கமாகக் கொண்டு, சுகாதார அமைச்சு பாதுகாப்பு அமைச்சுடன் கலந்துரையாடல்களை ஆரம்பித்ததுள்ளனர். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கமைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்களின் வழிகாட்டுதலுக்கமைய நாடு முழுவதும் சுகாதார நடவடிக்கைகளுக்கு படையினர் அனுப்பபட்டுள்ளனர்.

அதன்படி, தற்போது மேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வன்னி பாதுகாப்புப் படைத் தலமையக தளபதிகளின் முழுமையான கண்காணிப்பில் கொழும்பு மற்றும் கண்டி தேசிய வைத்தியசாலைகள், களுபோவில, கராப்பிட்டி, மஹாமோதர, பேராதனை, அனுராதபுரம் மற்றும் குருநாகல் போதனா வைத்தியசாலைகள், கொழும்பு கண் வைத்தியசாலை, மாத்தளை, பொலன்னறுவை, மெதிரிகிரிய, ஹிங்குராக்கொட, மட்டக்களப்பு, தெஹியத்தகண்டிய, ஹம்பாந்தோட்டை, தெபரவெவ, இரத்தினபுரி, பலாங்கொடை, எஹெலியகொட, நாவலப்பிட்டி, பதுளை, எல்பிட்டிய, ஹோமாகம, கேகாலை, பண்டாரவளை, வெலிமட,மதவாச்சி,கெக்கிராவ,பதவிய,கஹடகஸ்திகிலிய, ஒட்டுசுட்டான், மற்றும் மாங்குளம் ஆகிய 48 வைத்தியசாலைகளின் தினசரி நடவடிக்கைகளை இடையூறு இன்றிப் பராமரிப்பதற்காக சுமார் 900 இராணுவத்தினர் தற்போது பணியமர்தப்பட்டுள்ளனர். மேலும், அவசரநிலை ஏற்பட்டால் மேலதிக படையினர் தயார் நிலையில் உள்ளனர்.