Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th January 2021 22:35:08 Hours

சீன பாதுகாப்பு இணைப்பு அதிகாரிகள் மற்றும் இராணுவத் தளபதிக்கிடையிலான சந்திப்பு

இலங்கைக்கான சீன பாதுகாப்பு இணைப்பு சிரேஷ்ட அதிகாரி கேணல் வாங் டொங் மற்றும் பிரதி பாதுகாப்பு இணைப்பு அதிகாரி கேணல் சாங் கியன்ஜின் ஆகியோர், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களை திங்களன்று (25) இராணுவத் தலைமையகத்தில் சந்தித்தனர்.

குறித்த சந்திப்பில் சீன இராணுவத்தால் ஏற்கனவே இலங்கைக்கு வழங்கப்பட்ட ஒத்துழைப்பிற்கு மேலதிகமாக, இரு நிறுவனங்களுக்கிடையிலான நல்லுறவு மற்றும் இலங்கையிலுள்ள முப்படையினருக்கு பொருத்தமான பயிற்சியினை மேலும் முன்னேற்றுவதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பாகவும் கவனம் செலுத்தப்பட்டன.

சீன இராணுவம் கடந்த இரண்டு வருடங்களாக இலங்கை இராணுவத்திற்கு வழங்கி வரும் ஒத்துழைப்பை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்ட ஜெனரல் ஷவேந்திர சில்வா எதிர்காலத்தில் இதுபோன்ற உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கான தனது விருப்பத்தினையும் அவர்களிடம் வெளிப்படுத்தினார். short url link | youth nike kd low tops orange , Nike Air Max , Iicf