02nd May 2021 21:33:20 Hours
11 வது இலங்கை சமிஞ்சைப் படையின் மறைந்த சார்ஜென்ட்களில் ஒருவரான வத்தேகமயில் வாழும் குடும்பத்திற்காக நிர்மாணிக்கப்பட்ட புதிய வீட்டின் திறப்பினை கையளிக்கும் நிகழ்வி வியாழக்கிழமை (29) இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக இலங்கை இராணுவத்தின் பிரதம சமிஞ்சை அதிகாரியும் சமிஞ்சைப் படையின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் அசோக பீரிஸ் கலந்து கொண்டனர். இத் திட்டமானது சமிஞ்சைப் படையினரின் சிரம பங்களிப்பில் சமிஞ்சைப் படையின் தலைமையகம் மற்றும் சில நன்கொடையாளர்களின் நிதியுதவியிடன் நிறைவு செய்யப்பட்டது. பிரதம அதிதியினால் நினைவுப் பலகை திரை நீக்கம் செய்யப்பட்டு சமய சம்பிரதாயங்களின் பின்னர் குறுத்த தியாக வீரரின் மனைவி மற்றும் மகனிடம் வீட்டின் சாவி கையளிக்கப்பட்டது.
11 வது சமிஞ்சைப் படையின் கட்டளை அதிகாரி லெப்டினன்ட் கேணல் எஸ்.டி.கொத்தலாவல பயனாளிகளுடன் இணைந்து பிரதம அதிதியினை அன்புடன் வரவேற்றார். மே 2009 க்கு முன்னரான எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதிகளுடனான யுத்தத்தின் போது சார்ஜென்ட் ஜே.குமரசிங்க தனது உயிரைக் தியாகம் செய்திருந்தார்.
சமிஞ்சைப் பிரிகேட் பிரிகேடியர் லலித் ஹெரத், பிரிகேட், தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் பிரிகேடியர் சனக பிரதபசிங்க, தர உத்தரவாதம் மற்றும் ஆய்வு பணிப்பாளர் பிரிகேடியர் பிரியந்த தசநாயக்க, சமிஞ்சைப் படை தலைமையக நிலையத் தளபதி கேர்ணல் அசோக குணசேகர , சமிஞ்சைப் படை தலைமையகம் மற்றும் சமிஞ்சைப் படை பயிற்சி பாடசாலையின் சிரேஸ்ட அதிகாரிகள் கொவிட்- 19 சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பங்கேற்றனர்.