Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th April 2021 11:26:36 Hours

சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்ட 40 சந்தேக நபர்களை பொலிஸாருடன் இணைந்து இதுவரை கைது செய்துள்ள கிளிகிளிநொச்சி படையினர்

பாதுகாப்பு படையினர் கடந்த ஒருமாத காலத்தினுள் மார்ச் முதல் ஏப்ரல் வரை பொலிஸார், வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள் அதிகாரிகள் , வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள், புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கவியல் பணியகம், மதுவரி திணைக்களம் மற்றும் உரிய ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து கள்ளச் சாராய தயாரிப்புகள், சட்டவிரோத மணல் அகழ்வு, சட்டவிரோதமாக உட்புகுதல், கஞ்சா மற்றும் போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோதமாக வெட்டப்பட்ட வென் சந்தனம் கட்டைகள் கடத்தல், பாளை மற்றும் பிற பெறுமதியான மரங்கள் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் 28 சட்டவிரோத மணல் அகழ்வில் 48 கியூப் மணல் மீட்பு, 8815 கள்ளச்சாராயம் (கோடா) தயாரிப்பங்கள் மீதான சுற்றி வளைப்புக்கள், 35 லிட்டர் முழு வடிகட்டிய சட்டவிரோத மதுபானம், 100 அடி அகழ்வு உபகரணங்கள், 185.035 கிலோ கடத்தல் கஞ்சா, 100 வென் சந்தன கட்டைகள் மற்றும் பாளை மரக் குற்றிகள் மற்றும் 60 போதை மாத்திரைகள் என்பவற்றை மீட்டுள்ள அதே நேரத்தில் 40 க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களும்ம் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேற்படி செயற்பாடுகள் அனைத்தும் சட்டவிரோத செயற்பாடுகளை மட்டுப்படுத்துட் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டவை என்பதுடன், மேற்படி செயற்பாடுகளில் ஈடுபடுவோர் காரணமாக அவர்களது குடும்பங்கள் சீரழிவுக்கு உள்ளாகும் நிலைமை காணப்படமை குறிப்பிடத்தக்கதாகும்.

இராணுவ தளபதியின் அறிவுறுத்தலின் பேரில் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க அவர்களின் வழிகாட்டலின் கீழ் படையினர் மேற்படி கூட்டு நடவடிக்கைகளின் ஈடுபட்டனர்.

மேற்படி நடவடிக்கைளின் போது படையினர் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுக்கும் தருணங்களில் இராணுவ புலனாய்வு பிரிவினர் மோசடிகாரர்களின் மறைமுகமான செயற்பாடுகளை கண்காணித்து தகவல் வழங்கி கூட்டு நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர்.