14th December 2023 19:25:36 Hours
கொஸ்லந்த, கலிபானவெல கிராமத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய 31 குடும்பங்களைச் சேர்ந்த 141 பொதுமக்களை தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பின் ஆலோசனையின் பேரில் மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் 11 வது காலாட்படை பிரிவின் படையினர் திங்கட்கிழமை (டிசம்பர் 11) பாதுகாப்பாக வெளியேற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஹல்துமுல்ல பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 200 ஏக்கர் பரப்பளவில் மலைப்பாங்கான பிரதேசத்தில் பெய்துவரும் மழையினால் நிலச்சரிவு காரணமாக பல வீடுகள் முற்றிலும் சேதமடைந்தன, அச்சுறுத்தப்பட்ட இடங்களைச் சுற்றியுள்ள அனைத்து வீடுகளிலும் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
இதன்படி, இடம்பெயர்ந்த பொதுமக்களுக்காக இராணுவத்தினால் மேற்கொள்ளப்படும் நிலைமைகள் மற்றும் நடவடிக்கைகள் தொடர்பாக ஆராய்வதற்காக 11 வது காலாட் படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஆர்எம் ரணசிங்க டபிள்யூடபிள்யூவீ ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ, சிரேஷ்ட அதிகாரிகளுடன் இந்த இடத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.