Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

07th October 2018 21:30:45 Hours

கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இராணுவ ஆசிர்வாத பூஜைகள்

கிழக்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்துசித்த பனன்வல அவர்களது தலைமையில் (10) ஆம் திகதி இடம்பெறவிருக்கும் 69 ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு (6) ஆம் திகதி வியாழக் கிழமை இராணுவ ஆசிர்வாத பூஜைகள் மட்டக்களப்பில் உள்ள மங்களராம விகாரையில் இடம்பெற்றது.

இந்த பௌத்த நிகழ்வுகள் 23 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் சூல அபேநாயக, 231 ஆவது கட்டளை தளபதி பிரிகேடியர் செனரத் நிவுன்ஹெல்ல மற்றும் கிழக்கு பாதுகாப்பு முன்னரங்க கட்டளை தளபதியின் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.

இந்த ஆசிர்வாத பூஜைகள் மஹா சங்க அம்பிடிய சுமனரத்ன தேரர் அவர்களது தலைமையில் மட்டக்களப்பு மங்களராமய விகாரையில் ‘செத் பிரித்’ பூஜைகளுடன் இடம்பெற்றன. இதன் போது நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த படை வீரர்களையும் நினைவு படுத்தி ஆசிர்வாத பூஜைகள் இடம்பெற்றன.

ஆசிர்வாத பூஜைகளில் கிழக்கு முன்னரங்க பாதுகாப்பு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் மனோஜ் முதன்னாயக, படைத் தளபதிகள், இராணுவ சிரேஷ்ட அதிகாரிகள் இணைந்திருந்தனர்.Sportswear free shipping | adidas Yeezy Boost 700 , promo code for adidas shoes india delhi today