Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

26th October 2018 13:52:21 Hours

கிளிநொச்சி பொது மக்களுக்கு வாழ்வாதாரம் தொடர்பான கருத்தரங்கு

கிளிநொச்சிப் பிரதேசத்தில் குறைந்த வருமானத்தைப் பெறும் குடும்பங்களுக்காக கிளிநொச்சிப் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் கீழ் இயங்கும் 57ஆவது படைப் பிரிவினரால் செவ்வாய்க் கிழமை (23) தெரிவுசெய்யப்பட்ட 30 பன்னையாளர்களுக்கு தமது வாழ்வாதாரத்தை விருத்திசெய்யும் நோக்கிலான விரிவுரை கிளிநொச்சி சேவை மையத்தினால் இடம் பெற்றது.

மேலும் 572ஆவது படைப் பிரிவின் கீழ் இயங்கும் 14ஆவது இலங்கை தேசிய பாதுகாப்பு படையினரால் வைத்தியர் காமினி விக்கிரமரத்தின மற்றும் யாழ் பல்கலைக் கழகத்தின் விவசாயப் பிரிவின் பேராசிரியர் ஆனந்த குமார் போன்றோரால் கால்நடை வளர்ப்பு தொடர்பான விரிவுரை இடம் பெற்றது. அத்துடன் விரிவுரையாளர்கள் கால்நடை வளர்ப்பின் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு மேம்படுத்தல் தொடர்பான விளக்கத்தை வழங்கியதுடன் வாழ்வாதார மற்றும் விவசாய திணைக்களத்தின் மூலம் எவ்வாறு குறைந்த விலையில் கால்நடைகளைப் பெற்றுக் கொள்ளல் தொடர்பான விடயங்களையும் எடுத்துக் கூறினர்.

அதனைத் தொடர்ந்து கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதியவர்களின் வழிகாட்டலின் கீழ் 57ஆவது படைப் பிரிவின் கட்டளை அதிகாரியான மேஜர் ஜெனரல் விஜித ரவிப்பிரிய அவர்களின் தலைமையில் (வன்னி) மாங்குளம் பிரதேசத்தில் அமைந்துள்ள ஹோம் ஒப் ஜோய் சிறுவர் இல்லத்தின் 15 சிறார்களுக்கு மதிய உணவானது கடந்த செவ்வாய்க் கிழமை (23) வழங்கப்பட்டது.

மேலும் 574ஆவது படைப் பிரிவின் தளபதிவர்களின் கண்காணிப்பின் கீழ் இப் படையினர் பரிசில்கள் மற்றும் விளையாட்டு பொருட்கள் போன்றவற்றை இச் சிறார்களுக்கு வழங்கினர். அன்றய தினமே (23) இவ் இல்லத்தின் 7ஆவது ஆரம்ப ஆண்டை இச் சிறார்கள் கொண்டாடினர். bridge media | Nike Air Force 1 , Sneakers , Ietp STORE