Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

11th August 2019 18:42:10 Hours

கிளிநொச்சி படையினர் சிரமதான பணிகளில்

கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 65 ஆவது படைத் தலைமையத்தின் கீழ் உள்ள 651 மற்றும் 652 ஆவது படைத் தலைமையங்களின் படையினர் சிவில் இராணுவ ஒருங்கிணைப்புடன் இணைந்து ஓகஸ்ட் 5ஆம் திகதி தொடக்கம் 7 ஆம் திகதி வரை சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

இப் பணிகள் 651 ஆவது படைப் படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் 11 ஆவது (தொ) கஜபா படையணியின் படையினரால் கரியலனகபடுவான் விரவன் கோவில் வளாகம், டான் பாஸ்கோ முன்பள்ளி வளாகம் மற்றும் நாச்சிகுடா கிராம சேவா அலுவலக வளாகம் போன்ற இடங்களில் சிரமதான பணிகளை மேற்கொண்டனர்.

அதன்படி 652ஆவது படைப் பிரிவு படைத் தலைமையகத்தின் 20 ஆவது (தொ) விஜயபாகு காலாட்படை படையினரால் கொனவில் யுனியன் குலம், கட்ட அம்மன் கோவில் வளாகம சுத்தம் செய்தனர். இந்த சிரமதான பணிகளில் 60 க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

இப் பணிகள் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் விஜித ரவிபிரிய அவர்களின் பணிப்புரைக்கமைய 65 ஆவது படைப் தலைமையத்தின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் வசந்த குமரபெரும அவர்களின் மேற்பார்வையின் கீழ் மேற் கொள்ளப்பட்டது. bridgemedia | Air Jordan 1 Retro High OG "UNC Patent Leather" Obsidian/Blue Chill-White UK