Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

24th January 2024 19:37:09 Hours

கினாட்மான் - எம்என்எஸ்ஏ ஆர்சி 56 இதழில் மேஜர் ஜெனரல் லங்கா அமரபாலவின் ஆய்வறிக்கை

நிதி முகாமைத்துவ பணிப்பக பணிப்பாளரும் பொறியியல் சேவைகள் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களினால் தங்கப் பதக்கம் வென்ற ஆய்வறிக்கையான 'வன்முறை தீவிரவாதத்தை தடுப்பதிலும் எதிர்கொள்வதிலும் மூலோபாய அணுகுமுறைகள்: இலங்கையில் 2019 உயிர்த்த ஞாயிறு தாக்குதல் பற்றிய ஒரு சம்பவ ஆய்வு' , பாதுகாப்பு, மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கான பிலிப்பைன்ஸ் மையத்தின் கினாட்மான் - எம்என்எஸ்ஏ ஆர்சி 56 இதழுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மேஜர் ஜெனரல் ஏ.எச்.எல்.ஜி அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்கள் பிலிப்பைன் தேசிய பாதுகாப்புக் கல்லூரியின் 56 (2020/2021) நிரந்தர பாடநெறியின் போது தனது பெயரைப் பதிவுசெய்துள்ளார், அதே நேரத்தில் சிறந்த ஆய்வறிக்கைக்கான மதிப்புமிக்க சிறப்பு தங்கப் பதக்கத்தைப் பெற்றார்.

இந்த அசாதாரண சாதனையானது இலங்கை இராணுவத்திற்கும் ஒட்டுமொத்த தேசத்திற்கும் ஒரு முக்கிய மைல்கல்லாக உள்ளது.