Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2018 16:59:25 Hours

காலஞ் சென்ற ஜெனரல் ரொஹான் தலுவத்த அவர்களது பூதவுடல் இராணுவ மரியாதையுடன் அடக்கம்

முன்னாள் இராணுவ தளபதியான ஜெனரல் ரொஹான் தலுவத்த அவர்களது இறுதி மரணச் சடங்குகள் பொரல்லை பொது மயானத்தில் இராணுவத்தின் பூரண மரியாதையுடன் (29) ஆம் திகதி புதன் கிழமை மாலை இடம்பெற்றன.

இவரது பூதவுடலுக்கு இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக, இராணுவ பதவி நிலை பிரதானி தம்பத் பெர்ணாண்டோ, மேற்கு பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெனரல் சத்யபிரிய லியனகே அவர்கள் மரியாதையை செலுத்தினர்.

இவரது பூதவுடல் நாராஹேன்பிட சந்தியிலிருந்து இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் பொறளை பொது மையானத்திற்கு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டன.

பின்னர் இவரது சேவையை பாராட்டி பகுதி 1 (Part – 1) வெ ளியிடப்பட்டன. அதன் பின்னர் 21 துப்பாக்கி வேட்டுகள் முழங்கப்பட்டு மரியாதைகள் செலுத்தப்பட்டன. Running sports | FASHION NEWS