Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

01st December 2022 19:50:06 Hours

கவச வாகன படையணியின் உயிர்நீத்த போர் வீரர்களுக்கு அஞ்சலி

2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்கு முன்னர் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது மகத்தான தியாகம் செய்த இலங்கை கவச வாகன படையணியின் 28 அதிகாரிகள் மற்றும் 415 சிப்பாய்களை நினைவு கூறும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (27) கலத்தேவ கவச வாகன படையணி முகாம் போர் வீரர்களின் நினைவுத்தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தலுடன் இடம்பெற்றது.

இந்த நினைவேந்தல் வரவிருக்கும் கவச வாகன படையணியின் ஆண்டு நிறைவு தினத்திக்கு இணையாக கவச வாகன படையணியின் படையினரினால் கவச வாகன படையணியின் படைத் தளபதியும், இராணுவச் செயலாளருமான மேஜர் ஜெனரல் சுவர்ண போத்தோட்ட அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கவச வாகன படையணி படை தளபதி கலந்து கொண்டதுடன், மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஆரம்பத்தில் கவச வாகன பிரகேட் தளபதி பிரிகேடியர் பிரியந்த காரியவசம் மற்றும் கவச வாகன படையணியின் நிலைய தளபதி பிரிகேடியர் பியல் விஜேசிறிவர்தன ஆகியோர் நுழைவாயிலில் படைத் தளபதியை வரவேற்றனர்.

பின்னர், அன்றைய அதிதி, சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் உயிரிழந்த போர் வீரர்களின் குடும்ப உறுப்பினர்களால் நினைவு தூபிக்கு சென்று அவர்களின் நினைவாக மலர் அஞ்சலி செலுத்தினர். மேலும் கவச வாகன படையணி படைத் தளபதி, அந்த இடத்தில் இருந்த குடும்ப உறுப்பினர்களுடன் சில கருத்துக்களை பகிர்ந்து கொள்வதற்கு நேரத்தை எடுத்துக் கொண்டார்.