Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th December 2023 22:10:13 Hours

களுத்துறை 116 மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் விநியோகம்

களுத்துறையில் மிரிஸ்வத்த தமிழ் ஆரம்பப் பாடசாலை மற்றும் பேலியகொட தமிழ் ஆரம்பப் பாடசாலையைச் சேர்ந்த 116 மாணவர்கள் திங்கட்கிழமை (18 டிசம்பர் 2023) இராணுவத்தின் ஒன்றிணைப்பில் பாடசாலை உபகரணங்கள் வழங்கப்பட்டன. இராணுவத்தின் வேண்டுகோளுக்கு இணங்க சியெட் டயர் நிறுவனத்தின் அனுசரணையுடன், 61 வது காலாட் படைப்பிரிவு, 612 வது காலாட் பிரிகேட் மற்றும் 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணி ஆகியன இணைந்து இத் திட்டத்தை மேற்கொண்டன.

தலா ரூ. 10,000.00 பெறுமதியான பொதியில் பாடசாலை பை, பாடசாலை காலணிகள், எழுதுபொருட்கள், மதிய உணவு பெட்டி, தண்ணீர் போதல்கள் மற்றும் வாசிப்பு புத்தகங்கள் என்பன காணப்பட்டன.

இந்நிகழ்வில் 61 வது காலாட் படைப்பிரிவின் தளபதி, 612 வது காலாட் பிரிகேட் தளபதி, 20 வது இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கட்டளை அதிகாரி, சியெட் டயர் நிறுவனத்தின் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.