Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2022 15:53:56 Hours

களனிப் பல்கலைக்கழக இளங்கலைப் பட்டதாரிகள் நூலகப் புனரமைப்புக்கான உதவி

புத்தளம் மாவட்டத்தின் ஆனமடுவ வெலேவெவ சுமேத வித்தியாலயத்தில் புறக்கணிக்கப்பட்ட நூலக கட்டிடத்தை முழுமையாக புனரமைக்குமாறு மேற்கு பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கமைய களனிப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இளங்கலைப் பட்டதாரிகளால் அவர்களது தனிப்பட்ட நன்கொடைகள் மற்றும் வளங்களின் பயன்பாட்டுடன் 'தாயத-சரசவியன் குரு கெதரட சமூகத் திட்டத்தின்' கீழ் 14 வது படைப்பிரிவின் 141 வது காலாட் பிரிகேட்டின் 16 வது கஜபா படையணியின் படையினரால் புனரமைக்கப்பட்டது.

இந்த நீண்ட கால தேவையை பூர்த்தி செய்யும் நிமித்தம் முழு கட்டிடத்தையும் முழுமையாக புனரமைத்த பின்னர் திங்கட்கிழமை (28) பாடசாலை நிர்வாகிகள் மற்றும் மாணவர்களிடம் சம்பிரதாய முறைகளுக்கமைய படையினரால் ஒப்படைக்கப்பட்டது.

143 வது காலாட்படை பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிட்ச்சிலன் அவர்கள் பாடசாலைக்கு வருகை தந்து முழுமையாக புனரமைக்கப்பட்ட புதிய நூலகத்திற்கான திறப்புகளை சம்பிரதாயபூர்வமாக கையளித்தார்.

பாடசாலை அதிகாரிகளினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கமைய, 14 வது காலாட் படைபிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ரொஷான் ஜயமான்ன அவர்களின் பணிப்புரைக்கிணங்க 143 வது காலாட் பிரிகேடின் நெருக்கமான மேற்பார்வையின் கீழ், பல்கலைக்கழக மாணவர்கள் திட்டத்திற்கு அனுசரணை வழங்க முன்வந்ததையடுத்து இந்த நூலக கட்டிடத்தின் புனரமைப்பு பணிகள் 2022 நவம்பர் 18 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது.

16 கஜபா படையணி மற்றும் 143 வது காலாட்படை பிரிகேட் படையினர்களின் மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப திறன்களை பயன்படுத்தி 2022 நவம்பர் 18 ம் திகதி ஆரம்பிக்கப்பட்ட இத் திட்டம் இரண்டு வாரங்களுக்குள் முழுமையாக மறுசீரமைக்கப்பட்டது.

களனிப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ பீடத்தின் இறுதியாண்டின் இளங்கலைப் பட்டதாரிகள் ‘தாயத சரசவியன் குரு கெதரட சமூகத் திட்டம்’ மூலம் நிதியுதவி மற்றும் 1000 புதிய புத்தகங்களை புனரமைக்கப்பட்ட நூலகம் மீண்டும் திறக்கப்பட்ட நாளில் வழங்கப்பட்டன.

பல்கலைக்கழக அனுசரணையாளர்களின் சம்பிரதாய வருகை நிகழ்வில் 143 வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் பௌமி கிட்ச்சிலன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் அனுசரனையாளர்களான களனி பல்கலைக்கழக முகாமைத்துவ பீட இறுதியாண்டு மாணவர்கள், ஆனமடுவ கோட்டக் கல்விப் பணிப்பாளர், 16 வது கஜபா படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் எஸ்.ஏ.டி.பி ஜயரத்ன, சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துகொண்டனர்.