Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

06th December 2021 22:30:39 Hours

கமாண்டோ படையணி தலைமையகத்தில் புதிய அலுவலகம்

கனேமுல்ல கமாண்டோ படையணி தலைமையக வளாகத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள புதிய அலுவலக கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வில் பாதுகாப்புப் பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா பிரதம அதிதியாகக் வியாழன் (2) கலந்து கொண்டார்.

கமாண்டோ படையணி தலைமையகத்தின் பிரதான நுழைவாயிலில் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவிற்கு படையினர் பாதுகாவல் அறிக்கையிடல் மரியாதை செலுத்தினர் அதன் பிறகு. 14 வது படைப்பிரிவின் தளபதியும் கமாண்டோ படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்னவுடன் 65 வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் அனில் சமரசிறி, கமாண்டோ படையணியின் நிலையத் தளபதி பிரிகேடியர் ஷயமல் சில்வா மற்றும் கமாண்டோ பிரிகேட் தளபதி பிரிகேடியர் விஜித ஹெட்டியாராச்சி ஆகியோர் படையணி வளாகத்தில் ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு செங்கம்பள வரவேற்பு வழங்கினர்.

சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நடைப்பெற்ற இவ் நிகழ்வில் மஹா சங்கத்தினர் 'செத்பிரித்' பாராயணங்களை ஆரம்பித்ததையடுத்து சுபவேளையில் அடிக்கல்லை நாட்டி வைப்பதற்கு அன்றைய பிரதம அதிதியான ஜெனரல் ஷவேந்திர சில்வா அழைக்கப்பட்டார். மேலும் பல சிரேஷ்ட அதிகாரிகளும் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

முதலில் மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன அவர்கள் வருகை தந்த இராணுவத் தளபதியிடம் திட்டத்தின் விளக்கத்தை முன்வைத்ததுடன் அடிக்கல் நாட்டுவதற்கு முன்னர் அனைத்து நிர்வாக மற்றும் ஏனைய செயற்பாட்டுத் தேவைகளையும் சுமூகமாக நடத்துவதற்கு இவ்வாறான கூடுதல் தேவைகளையும் விளக்கினார்.

அன்றைய சுற்றுப்பயணத்தின் முடிவில் ஜெனரல் ஷவேந்திர சில்வா, படைத் தளபதியின் அழைப்புக்கு நன்றி தெரிவித்தார். சிரேஸ்ட அதிகாரிகள் , தளபதிகள் , கமாண்டோ படையணி கட்டளை அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உட்பட குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்கள் சுகாதார வழிகாட்டுதல்களுக்கு இணங்க அன்றைய தின நடவடிக்கைகளில் கலந்து கொண்டனர்.