Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

09th August 2022 21:20:28 Hours

கஜபா படையணியினை நிறுவுனருக்கு மலரஞ்சலி

இலங்கை இராணுவ வரலாற்றில் தலைசிறந்த இராணுவத் தலைவர்களில் ஒருவரும் கஜபா படையணியின் ஸ்தாபகத் தந்தையுமான மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ உள்ளிட்ட 8 பேருடன் தனது இன்னுயிரை ஈந்தவரின் 30 வது நினைவு தினம் சாலியபுர கஜபா படையணி தலைமையகத்தில் கஜபா படையணி படைத் தளபதியும் இலங்கை தேசிய பாதுகாப்புப் படையணி படைத் தளபதியும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் ஆகஸ்ட் 8 ஆம் திகதி நினைவுகூரப்பட்டது.

கஜபா படையணி நிலைய தளபதி பிரிகேடியர் விஸ்வஜித் வித்யானந்தவின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த வைபவத்தில் கஜபா படையணி படைத் தளபதியை பிரதிநிதித்துவப்படுத்தி வன்னி பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சம்பக்க ரணசிங்க கலந்துகொண்டார்.

அன்றைய தினம் நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்து மறைந்த மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்கள் மாவீரர் திருவுருவச் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தியதுடன், தாய்நாட்டை மீட்கும் நடவடிக்கையில் புலி பயங்கரவாத தாக்குதல்களினால் உயிரிழந்த வீரர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் கஜபா படையணியின் ஸ்தாபகர் காலஞ்சென்ற மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன அவர்கள் கௌரவிக்கப்பட்டதுடன் கஜபா படையணி தலைமையகத்தில் அமைந்துள்ள விகாரையில் பௌத்த துறவிகளின் செத்பிரித் பாராயணம் மற்றும் சமய நிகழ்வு இடம்பெற்றது.

லெப்டினன் ஜெனரல் டென்சில் கொப்பேகடுவ மேஜர் ஜெனரல் விஜய விமலரத்ன, ரியர் அட்மிரல் மொஹான் ஜயமஹா, லெப்டினன் கேணல் எச்.ஆர் ஸ்டீபன், லெப்டினன் கேணல் ஜி.எச். ஆரியரத்ன, லெப்டினன் கேணல் வைஎன் பலிபான, கமாண்டர் அசங்க லங்காதிலக, லெப்டினன் கேணல் நளின் டி அல்விஸ், லெப்டினன் கமாண்டர் சி.பி. விஜேபுர மற்றும் சிப்பாய் டபிள்யூஜே விக்ரமசிங்க ஆகியோர் 08 ஆகஸ்ட் 1992 அன்று அராலி முனையில் இராணுவ நடவடிக்கைகளை ஒழுங்கமைத்துக் கொண்டிருந்தபோது கண்ணிவெடிக்கு இலக்காகி உயீர்நீத்தனர்.

இந்நிகழ்வில் பிரதி நிறைவேற்றுத் தளபதி கேணல் இராஜேந்திர விஜேரத்ன, 22 வது கஜபா படையணி கட்டளை அதிகாரி மற்றும் படையணி தலைமையகத்தின் அனைத்து அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் கலந்துகொண்டனர்.