06th December 2021 19:57:37 Hours
இராணுவத்தினருக்கும் அவரது படையணிக்கும் பெருமை சேர்த்த கெமுனு படையணியின் மற்றுமொரு சிரேஷ்ட அதிகாரியான இராணுவத் தலைமையகத்தின் பொதுப் பணி பணிப்பாளர் நாயகமும் இயந்திர காலாட் படையணி படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மற்றும் அவரது குடும்பத்தினர் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் அழைப்பின் பேரில் இராணுவத் தலைமையகத்தில் 2ம் திகதி காலை சந்தித்தனர்
தளபதி அலுவலகத்திற்கு வந்த மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களை பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அன்புடன் வரவேற்றார்.ஓய்வுபெறவுள்ள மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ அவர்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக்கொண்டதுடன் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக அவரது சிறப்பான சேவையைப் பாராட்டினார்.
மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ இராஜதந்திர பதவிகளை வகிக்கும் போது இராணுவம் மற்றும் வெளிநாடுகளில் குறிப்பிடத்தக்க தொழில்முறை பதவிகளை வகித்ததாக மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.வடக்கு மற்றும் கிழக்கில் மனிதாபிமான நடவடிக்கைகளின் போது பயங்கரவாதிகளுக்கு எதிராக துணிச்சலுடன் போராடிய மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ ஆற்றிய அளப்பரிய சேவையை நிமித்தமாக அவர் இரண்டு முறை ரணவிக்ரம பதக்கம் வென்றதையும் இராணுவத் தளபதி நினைவு கூர்ந்தார்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட ஓய்வுபெறும் சிரேஷ்ட அதிகாரியின் பிள்ளைகளுடன் கலந்துரையாடிய தளபதி தாய்நாட்டின் ஒற்றுமைக்காகவும் இராணுவத்தின் முன்னேற்றத்திற்காகவும் தந்தை முன்னுதாரணமான சேவையை ஆற்றியதாக தெரிவித்தார். "உங்கள் தந்தையின் 34 வருட இராணுவ சேவையின் விசுவாசமும் அர்ப்பணிப்பும் அவரது வெற்றியின் அடையாளங்களாகும். லண்டனில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கை தூதுவராக (பாதுகாப்பு) அவர் ஆற்றிய சேவை குறிப்பிடத்தக்கதாகும். இராணுவக் கல்வியின் ஒரு பண்பாக, உங்களுக்கு ஒதுக்கப்பட்ட பொறுப்புகள் மற்றும் செயல்பாடுகளை மற்றவர்களின் திருப்திக்காக மிகுந்த நேர்மையுடன் நிறைவேற்றுகிறீர்கள், என எதிர்பார்ப்பாதாக ” அவர் கூறினார்.
சிறப்புமிக்க சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ள சிரேஷ்ட அதிகாரிக்குஜெனரல் ஷவேந்திரி சில்வா விசேட நினைவுப் பரிசை வழங்கி அவரது எதிர்கால அபிலாஷைகள் மற்றும் தொழில் வாழ்க்கைக்கு வாழ்த்து தெரிவித்தார். ரணவிரு செவன தளபதி, 58 வது படைப்பிரிவு தளபதியாக அவர் செய்த சேவையை போலவே தற்போது ஆற்றிய இராணுவத் தலைமையகத்தின் பொதுப் பணிப்பாளர் நாயகம் ஆகிய சேவையையும் தளபதி நினைவுகூர்ந்தார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான மனிதாபிமான நடவடிக்கையின் போது நாட்டின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவின் குடும்ப உறுப்பினர்களையும் தளபதி பாராட்டினார். சந்திப்பின் இறுதியில் மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோவின் குடும்ப உறுப்பினர்களுக்கு நினைவுச் சின்னமும் இராணுவ தளபதியினால் வழங்கி வைக்கப்பட்டது.
இராணுவத் தலைமையகத்தின் பொதுப் பணிப்பாளர் நாயகமாக பதவியேற்பதற்கு முன்னர், மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ 58 வது படைப்பிரிவின் தளபதியாக கடமையாற்றிய போது பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களிடையே நட்புறவையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டார். அவர் ஜனவரி 2021 இல் இராணுவத் தலைமையகத்தின் பொதுப் பணிப்பாளர் நாயகமாக பொறுப்பேற்றார்.
இச் சந்திப்பின் போது மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ தனது பணியின் போது தளபதி வழங்கிய ஆதரவு, வழிகாட்டுதல், ஆலோசனை, ஊக்கம் மற்றும் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
1986 ஆம் ஆண்டு ஒக்டோபர் 27 ஆம் திகதி இலங்கை இராணுவ நிரந்தர படையில் பயிலிளவல் அதிகாரியாக இணைந்து கொண்ட மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ தியத்தலாவ இலங்கை இராணுவக் கல்வியற் கல்லூரியில் தனது அடிப்படை இராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து 1987 ஆம் ஆண்டு ஜூலை 23 ஆம் திகதி 5 வது கெமுனு ஹேவா படையணியின் இரண்டாம் லெப்டினன்டாகத் அதிகாரவாணையினை பெற்றுக் கொண்டார். அப்போதிருந்து மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ இராணுவத்தில் பல ஆலோசனை மற்றும் பணிநிலை பதவிகளை வகித்து தீவிர இராணுவ சேவையில் பணியாற்றினார்.
2017 ஆகஸ்ட் 5 முதல் 2018 பெப்ரவரி 28 வரை ஐக்கிய இராச்சியத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தில் இலங்கை தூதுவராக (பாதுகாப்பு) பணியாற்றிய மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ சீனாவில் பிரிகேட் பாடநெறியினையும் பயின்றுள்ளார். மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ அப் பாடநெறியை வெற்றிகரமாக முடித்து இலங்கை திரும்பியதுடன் 2018 முதல் 2019 வரை ரணவிரு செவன தளபதியாகவும் 2019 ஜனவரி முதல் டிசம்பர் வரை ரணவிரு வள மையத்தின் தளபதியாகவும் பணியாற்றினார். அதன்பிறகு, மேஜர் ஜெனரல் பிரியங்க பெர்னாண்டோ 2019 ஜனவரி 24 முதல் டிசம்பர் 18 வரை இராணுவத் தலைமையகத்தில் காணி சொத்து மற்றும் வீடமைப்புப் துறை பணிப்பாளராகப் பணியாற்றினார்.