Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th August 2018 17:01:25 Hours

'எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா V2025' கண்காட்சியை பார்வையிட இராணுவ தளபதி வருகை

'எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா V2025' கண்காட்சி மொனராகலையில் வெகுஜன ஊடக மற்றும் நிதியமைச்சர் அவர்களது தலைமையில் புதன் கீழமை (29) ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டன. இந்த கண்காட்சி மக்கள் தமது தொழில்முனைவோர் திறன்களை உயர்த்துவதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும், நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகளை வழங்கும் நோக்கமாகக் கொண்டிருந்தது. அத்துடன் இக்கண்காட்சி ஓகஸ்ட் 31 ஆம் திகதி வரை பொது மக்களின் கண்காட்சிக்காக திறந்திருக்கும்.

இந்த கண்காட்சி அரசாங்கத்தால் வழங்கப்பட்ட கடன்களுடன் புதிய வர்த்தக முயற்சிகளுக்கு முதலீட்டாளர்களுக்கு ஆர்வம் காட்டியுள்ளதுடன், 2025 ஆம் ஆண்டில் மொனராகலை மாவட்டத்தில் வளர்ந்து வரும் ஆக்கபூர்வமான தொழில்முனைவோர் பங்களிப்புடன் நாட்டின் புதிய புத்துயிரூட்டு பொருளாதார தளத்திற்கு உதாரணமாக விளங்குகின்றது.

இந்த கண்காட்சிகளில் இராணுவ தளபதியின் பணிப்புரைக்கமைய இராணுவத்தின் ஏற்பாட்டில் கொமாண்டோ படையணியின் சகாச கண்காட்சிகள் மற்றும் இராணுவத்தின் புகைப்பட கண்காட்சி கூடாரங்களும் இந்த கண்காட்சி பூமியினுள் அமைக்கப்பட்டிருந்தன. இவற்றையும் இராணுவ தளபதி சென்று பார்வையிட்டார்.

கண்காட்சி மற்றும் தேசிய கட்டடத்தை மேம்படுத்துவதற்காக இராணுவத்தால் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இந்த கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. 'எண்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா V2025' கண்காட்சி ஆரம்ப நிகழ்வு புதன்கிழமை (29) ஆம் திகதி இடம்பெற்ற போது இராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனநாயக அவர்களும் கலந்து கொண்டார். Running Sneakers | Nike Shoes