19th February 2024 13:55:25 Hours
இலங்கை பொறியியல் படையணியின் மேஜர் ஜெனரல் டிஎஸ்கே விஜேசூரிய (ஓய்வு) ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் ஞாயிற்றுக்கிழமை (18 பெப்ரவரி 2024) சுகயீனம் காரணமாக நாரஹேன்பிட்டி கொழும்பு இராணுவ மருத்துவமனையில் 79 வயதில் காலமானார்.
அவரது சிறப்புமிக்க சேவையும், அர்ப்பணிப்பும் புதிய பரிமாணங்களை உருவாக்க உதவியதுடன், அமைப்பு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கும் பங்களித்துள்ளது. இறுதி மரியாதைக்காக இறந்த அதிகாரியின் பூதவுடல் 2024 பெப்ரவரி 20 மாலை 6.00 மணி முதல் ஜயரத்ன மலர்சலையில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டும்.
அவரது இறுதி கிரியைகள் 2024 பெப்ரவரி 21 ஆம் திகதி பொரளை பொது மயானத்தில் மாலை 5.30 மணியளவில் பூரண இராணுவ மரியாதையுடன் நடைபெறும்.