Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

25th April 2021 20:19:43 Hours

'இலங்கை தேசிய தொழில் பயிற்சி விருதுகள் – 2020 இல் ரணவீரு வள மையத்திற்கு 2 ம் இடம்

அண்மையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற இலங்கை தேசிய தொழில் பயிற்சி விருதுகள்- 2020 விருது வழங்கல் விழா மேல் மாகாண சிறந்த நடுத்தர அளவிலான பொதுத்துறை பயிற்சி வழங்குநர்களுக்கான2 வது இடத்தை இலங்கை தொழிற் பயிற்சி அதிகாரசபை மற்றும் ஹேக்கித்த ரணவிரு வள மையம் ஆகியன இணைந்து பெற்றுக்கொண்டன.

விருது வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக திறன் மேம்பாட்டு தொழிற்கல்வி இராஜாங்க அமைச்சர் வைத்தியர் சீதா அரம்பேபொல கலந்து கொண்டார். மூன்றாம் நிலை மற்றும் தொழிற்பயிற்சி ஆணைக்குழு மற்றும் அமைச்சின் திறன் மேம்பாட்டுத் திட்டத்துடன் இணைந்து விருது வழங்கும் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இராணுவ வள நிலைய தளபதி பிரிகேடியர் கிரிஷாந்த பெரேரா இந்நிகழ்வில் கலந்துகொண்டு மேல் மாகாணத்தில் 2 ஆம் இடம் பெற்றமைக்கான விருதையும் பெற்றுக்கொண்டார். இந்த சாதனையை அறிந்து இராணுவ தளபதியும் பாதுகாப்பு பதவி நிலை பிரதானியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களினால் வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டது.

இராணுவ வள நிலையம் 2013 ஆம் ஆண்டு மே மாதம் 24 ஆம் திகதி அப்போதைய பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான அதிமேதகு கோட்டாபய ராஜபக்‌ஷ அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. காயமடைந்த மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்களுக்கு சர்வதேச அங்கீகரிகாரம் பெற்ற ஒன்பது தொழில் துறை பாடநெறிகள் மூலம் தேசிய தொழில் தகுதி சான்றிதழைப் பெற மேற்படி பாடநெறிகள் உதவுகின்றன.