Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

27th December 2023 20:04:48 Hours

இலங்கை சிங்க படையணியின் முன்னாள் படையினர் படையணியின் படைத் தளபதிக்கு பாராட்டு

இலங்கை சிங்க படையணியின் முன்னாள் படைவீரர் சங்கத்தின் உறுப்பினர்கள் இலங்கை சிங்கப் படையணியின் படைத் தளபதியும் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதியுமான மேஜர் ஜெனரல் யு டி விஜேசேகர ஆர்டப்ளியுபீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ ஆரசீடிஎஸ் பீஎஸ்சீ அவர்களை 22 டிசம்பர் 2023 அன்று படையணி தலைமையகத்தில் அவரது அலுவலகத்தில் சந்தித்தனர். .

அதே சந்தர்ப்பத்தில், முன்னாள் படைவீரர் சங்கத்தின் பிரதம ஆலோசகராக இருந்து ஆற்றிய பெறுமதியான சேவைகளைப் பாராட்டி, முன்னாள் படைவீரர் சங்கத்தின் உப தலைவர் மேஜர் ஆர்கேஎல்ஆர் ரணவீர யுஎஸ்பீ (ஓய்வு) அவர்கள் படையணி படைத் தளபதிக்கு நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கினார்.