26th April 2021 23:23:01 Hours
இலங்கை இலேசாயுத காலாட் படையின் சிரேஸ்ட அதிகாரிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்க புதன்கிழமை (21) பனாகொட இலங்கை இலேசாயுத காலாட் படையின் 14வது படைத் தளபதியாக மத ஆசிர்வாதங்கள் மற்றும் வாழ்த்துக்களுடன் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு தலைமையக வளாகத்திற்கு வருகை தந்த போது அவருக்கு பாதுகாவலர் அறிக்கையிடல் மரியாதை வழங்கப்பட்டதுடன், பிரதி நிலையத் தளபதி கேணல் பிரபாத் ஜயசிங்க அவர்களால் வரவேற்பளிக்கப்பட்டது.
அதனைடுத்து சிறிது நேரத்திற்கு பின்னர் இலங்கை இலேசாயுத காலாட் படையின் நிலையத் தளபதி பிரிகேடியர் கிருஷாந்த பீரிஸ் அவர்களாலும் சிரேஷ்ட அதிகாரிக்கு வரவேற்பளிக்கப்பட்டது. அதனைடுத்து அவருக்கு படையினரின் அணிவகுப்பு மரியாதையும் வழங்கப்பட்டது.
அதனையடுத்து தாய்நாட்டிற்காக போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கான இலங்கை இலேசாயுத படை வீரர்களை நினைவுகூறும் வகையிலும் அவர்களின் தியாகங்களை போற்றும் வகையிலும் புதிய படைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவக்கு அவர்களால் மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதனையடுத்து புதிய அலுவலகத்தின் கடமைகளை பொறுப்பேற்பதற்கான உத்தியோகபூர்வ ஆவணங்களில் மகா சங்கத்தினரின் செத் பிரித் பாராயணங்களுக்கு மத்தியில் சிரேஸ்ட அதிகாரிகள் முன்னிலையில் கையொப்பமிட்டார்.
அதனையடுத்து அனைத்து நிலைகளுக்குமான தேநீர் விருந்துபசாரத்தில் பங்கெடுத்த அவர், நிகழ்வின் நிறைவம்சமாக அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களுக்கான உரையொன்றினையும் நிகழ்த்தினார்.