Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

17th January 2024 18:40:24 Hours

இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 34 வது ஆண்டு நிறைவு கொண்டாட்டம்

இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் 34 வது ஆண்டு நிறைவு விழா 2024 ஜனவரி 15 ஆம் திகதி வெரஹெர படையணி தலைமையகத்தில் இராணுவ சம்பிரதாயங்கள் மற்றும் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் கொண்டாடப்பட்டது. இராணுவ சுகாதார சேவைகள் பணிப்பகத்தின் பணிப்பாளர் நாயகமும் இலங்கை இராணுவ மருத்துவப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பீஏசீ பெர்னாண்டோ யூஎஸ்பீ அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

இந்த நாளின் சிறப்பம்சமாக, படையணியின் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் குறிக்கும் வகையில் புதிதாக கட்டப்பட்ட நலநோம்பு கட்டிடம் மற்றும் கிரிக்கெட் பயிற்சி கலம் என்பன படைத் தளபதியினால் திறந்து வைக்கப்பட்டது.

ஆண்டு நிறைவு விழா அனைத்து நிலையினருடனான மதிய உணவு விருந்துடன் நிறைவடைந்தது.