Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

13th January 2024 19:30:27 Hours

இலங்கை இராணுவ தொண்டர் படையணி தளபதி சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரை

இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி மேஜர் ஜெனரல் எம்.கே ஜயவர்தன ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்கள் சூம் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 2024 ஜனவரி 8 அன்று இலங்கை இராணுவத் தொண்டர் படையணியின் கட்டளை அமைப்புகளின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு உரையாற்றினார்.

கலந்துரையாடலின் போது தளபதி இலங்கை இராணுவத் தொண்டர் படையணி அதிகாரிகள் மற்றும் சிப்பாய்களின் பயிற்சியின் முக்கியத்துவத்தை விளக்கியதுடன் சிரேஷ்ட அதிகாரிகளுக்கு அவர்களின் கட்டளையின் கீழ் உள்ள சிப்பாய்களின் பயிற்சியை மேம்படுத்த அறிவுறுத்தினார். மேலும், வீரர்களின் ஒழுக்கம் மற்றும் நலன் குறித்து அவர் எடுத்துரைத்தார். மேலும், இலங்கை இராணுவத் தொண்டர் படையணி தளபதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அவர்களின் தற்போதைய பிரச்சினைகளை சரிசெய்வதற்கு தேவையான வழிகாட்டுதலை வழங்கியதுடன் அவை அமர்வின் போது விவாதிக்கப்பட்டன.

இக்கலந்துரையாடலில் இலங்கை இராணுவத் தொண்டர் படையணி பிரதி தளபதி உட்பட சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஏனைய அதிகாரிகள் கலந்துகொண்டனர்.