Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

30th November 2023 20:01:22 Hours

இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு விரிவுரை

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் வேண்டுகோளுக்கு இணங்க, தியத்தலாவ இலங்கை இராணுவ கல்வியற் கல்லூரியினால் திணைக்களத்தின் கால்நடை சத்திரசிகிச்சை நிபுணர்களுக்குதலைமைத்துவ பயிற்சியினை நவம்பர் 28 - 29 வரை பேராதனையிலுள்ள தொடர் கல்வி நிறுவனத்தில் வழங்கப்பட்டது.

இராணுவ கல்வியற்கல்லூரி சிரேஷ்ட பயிற்றுவிப்பாளர் மேஜர் என்எஸ்பீ டி சில்வா டப்ளியூடப்ளியூவீ ஆர்எஸ்பீ யுஎஸ்பீ பீஎஸ்சி அவர்கள் இரண்டு நாள் பயிற்சி விரிவுரையை நடத்தினார். தலைமைத்துவம், முடிவெடுத்தல், சிக்கல்களைத் தீர்ப்பது, சமூக நெறிமுறைகள் மற்றும் மன அழுத்த முகாமை போன்றவை தொடர்பில் நடைமுறை மற்றும் விரிவுரைகள் நடத்தப்பட்டன.