Header Block Tamil

இலங்கை இராணுவம்

தேசத்தின் பாதுகாவலர்

20th February 2024 09:55:51 Hours

இலங்கையில் உயிரிழந்த இந்திய அமைதி காக்கும் படையினருக்கு இந்திய உயர்ஸ்தானிகர் அஞ்சலி

1987 முதல் 1990 வரை இலங்கையில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின் போது பணியாற்றிய இந்திய அமைதி காக்கும் படையின் வீரமரணமடைந்த போர் வீரர்களுக்கு இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா அவர்கள் 2024 பெப்ரவரி 17 ஆம் திகதி யாழ். பலாலி இந்திய அமைதி காக்கும் படையின் நினைவுத் தூபியில் அஞ்சலி செலுத்தினார்.

யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எம்ஜிடபிள்யூடபிள்யூடபிள்யூஎம்சிபி விக்ரமசிங்க ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ பீஎஸ்சீ அவர்கள் உயர்ஸ்தானிகரை வரவேற்றதுடன், யாழில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்துடன் தூதுவர் திரு. ராகேஷ் நட்ராஜ் அவர்கள் உயர் ஸ்தானிகர் அவர்களுடன் இணைந்த, வீரமரணமடைந்த வீரர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்தினார்.

அஞ்சலியைத் தொடர்ந்து, உயர்ஸ்தானிகர் மற்றும் யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி ஆகியோர் கலந்துரையாடலில் ஈடுபட்டனர். யாழில் உள்ள இலங்கைக்கான இந்திய துணைத் தூதரகத்தின் அலுவலகத்துடன் இணைந்து யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத்தினால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் அதிகாரிகள் மற்றும் இருதரப்பை பின்பற்றி பலர் கலந்துகொண்டனர்.