22nd December 2023 20:40:19 Hours
இராணுவத்தினரால் நிர்வகிக்கப்படும் லயா ஹோட்டல் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘லயா உணவுத் திருவிழா’ வெள்ளிக்கிழமை (டிசம்பர் 21) வாத்துவ ‘லயா பீச்’ ஹோட்டலில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் இராணுவ பதவி நிலை பிரதானி மேஜர் ஜெனரல் டபிள்யூ எச் கே எஸ் பீரிஸ் ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டீயூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்களிடையே ஆரோக்கியமான இலங்கை உணவு வகைகளை ஊக்குவித்தல், இலங்கையின் பூர்வீக உணவு வகைகள் தொடர்பாக பிள்ளைகளுக்குக் கற்பித்தல் மற்றும் பார்வையாளர்களிடையே லயா ஹோட்டல் வர்த்தக நாமத்தை மேம்படுத்துவதுடன் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை ஊக்குவித்தல் இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் முதன்மையான நோக்கமாகும்.
‘லயா’ என்பது இலங்கை இராணுவத்தின் ஓய்வுப் பிரிவினால் நிர்வகிக்கப்படும் புகழ்பெற்ற இலங்கை ஹோட்டலாகும். இலங்கையில் உள்ள லயா ஹோட்டல் சங்கிலியானது லயா பீச் ஹோட்டல், லயா சபாரி ஹோட்டல், லயா வேவ் ஹோட்டல் மற்றும் லயா லீஷர் ஹோட்டல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. இந்த உணவு திருவிழா 2023 டிசம்பர் 23 வரை தொடருவதுடன் பொதுமக்களுக்காக திறந்திருக்கும்.
ஹோட்ட அமைப்பில் சேவையாற்றும் பல சிரேஷ்ட அதிகாரிகள், அவர்களது துணைவியர், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் ஊடகப் பிரதிநிதிகள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.